வகுப்பு: உயர் நிலை 2 , ஹியூமிலிட்டி
சி.எச்.ஐ.ஜே செயிண்ட் ஜோசஃப்ஸ் கான்வெண்ட்
பிழை திருத்தம்
மகாகவி சுப்பிரமணிய பாரதியார் ஒரு தமிழ் கவிஞர். இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் கடல் தெறிக்கும் விடுதலைப் போர் கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இவர் ஒரு கவிஞர் மட்டுமல்ல ஒரு எழுத்தாளரும், பத்திரிக்கையாசிரியரும் மற்றும் சமூக சீர்திருத்தவாதியும் ஆவார். தன்னுடைய பாட்டுக்களின் மூலமாக சிந்தனைகளை மக்களிடம் தட்டி எழுப்பியவர். தம் தாய் மொழியாம் தமிழ் மீது அளவு கடந்த பற்று கொண்ட இவர் “யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று போற்றிப் பாடியுள்ளனர். விடுதலை போராட்ட காலத்தில் இவருடைய தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதை மக்களை ஒருங்கிணைத்த காரணத்தினால் தேசிய கவியாக போற்றப்பட்டார். பாரதியின் எழுச்சிக்கு தமிழ்நாட்டில் பலத்த ஆதரவு இருப்பதைக் கண்ட பிரிட்டிஷ் ஆட்சி இந்திய பத்திரிக்கைக்கு தடை விதித்து அவரை கைது செய்து சிரையில் அடைத்தது. எனினும் தமிழ் மொழி மீது கொண்ட பற்றால் அவர் மறைந்தாலும் அவர் ஆற்றிய அளப்பரிய பணிகளால் அன்றும் இன்று அழியாப் புகழோடு வாழ்கிறார்.