
இலவசமாக படிக்கலாம்
✦ நாவல் ✦
இனி ஒரு வசந்தம்
Ini Oru Vasantham
மகாலட்சுமி நாராயணன்
2023
நாவல்
தமிழ்
சிங்கப்பூரில் வாழும் தமிழ் மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட இந்நாவல், மனித உறவுகளின் சிக்கலான நூல்களை அழகிய தமிழ் நடையில் ஆராய்கிறது. காலம் கடந்தும் மனதில் தங்கும் கதைமாந்தர்கள், வாசகரை ஒரு புது வசந்தத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள்.
✦ விமர்சனம் ✦
வாசகர் கருத்து
எழுத்தில் அதிக ஈடுபாடு கொண்ட ஆசிரியை மகாலட்சுமி நாராயணன் தமிழார்வம் மிக்கவர் என்பது, அவரது ஒவ்வொரு படைப்பிலும் அவர் சூட்டும் கதாபாத்திரத்தின் பெயரை வைத்தே அறியலாம்.
இந்நாவலில் ஒவ்வொரு பாத்திரத்தையும் குணவார்ப்புடன் மிக நேர்த்தியாக உருவாக்கியிருக்கும் பாங்கு, கதாசிரியைக்கு உயர்ந்த மனோபாவம் இருந்தால்தான் இத்தகைய உருவாக்கங்களை சிருஷ்டிக்க முடியும். இந்த மனோதர்மம் எழுத்தாளருக்கு நிறையவே இருக்கிறது. இவரது படைப்புகள் இப்போதைய துரித காலத்திற்கு ஈடுகொடுக்கும் கரு. அதை அமுத்தமாகக் காட்டும் நிகழ்வுகள் அதன் கதாபாத்திர அமைப்பிலும், இலக்கிய உரையாடல்களை இல்லாமல், இயல்பான சாதாரண பேச்சு வழக்குகளிலும் சூழ்நிலைகளைச் சித்திரிப்பதிலும் அவற்றை நயமாகச் சொல்லும் எழுத்தாளர் நடையும் படிப்பவர்களை சோர்வடையச் செய்யாத எளிமையிலும் அழகியலிலும் அடேயப்பா!
படித்து முடிக்கும்போது நாவலில் உள்ளவர்கள் நம்மைச்சுற்றி இருக்கிறார்கள்... அவர்கள் மத்தியில் நாம் இருக்கிறோமா என வியந்து போகிறேன். இலக்கியங்களைப் படித்துத் தன் எண்ணங்களைச் சொல்பவன் விமரிசகன். வாழ்க்கையைப் பயின்று படைப்பைக் காண்பவன் எழுத்தாளன். இருவரையும் கணிந்து முடிவை நிலைநிறுத்துவது காலம். இனிவரும் இலக்கியக் காலங்கள் இவரின் படைப்புகளைக் கண்டுகொள்ளும்!
எழுத்தாளர் திருமதி. அபிராமி
மதுரை
நீங்களும் படிக்கத் தயாரா?
இலவசமாக, நேரடியாக, தமிழில்